Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மருதனார் மட சந்தியில் வாள் வெட்டு - ஒருவர் படுகாயம்!


மருதனார்மடம் சந்தியில் இராணுவம், பொலிஸார் முன்னிலையில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

சம்பவத்தில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு முன்பாக பழக்கடை நடத்துபவர் மீதே இவ்வாறு வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கழுத்து, காலில் பலத்த வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றன என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.

மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பலே ஊரடங்கு வேளையில் தாக்குதலை நடத்தியுள்ளது.

குறித்த நபர் மீதும் அண்மையில் அவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் தாக்குதல் நடத்தியோர் விளக்கமறியலில் உள்ள நிலையில் அதே கும்பலைச் சேர்ந்த ஏனையோரால் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

No comments