துப்பாக்கி முனையில் தமிழ் அரசியல் கைதிகளை முழங்காலிட்ட வைத்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சரை பதவி விலகுமாறு அரசாங்கம் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 12ஆம் திகதி மதுபோதையில் நண்பர்களுடன் சிறைச்சாலைகளுக்குள் சென்று அட்டகாசம் புரிந்ததுடன் , அநுராதபுர சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் இருவரை துப்பாக்கி முனையில் முழங்காலிட வைத்ததாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மீது குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச , தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் , தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புளெட் அமைப்பின் தலைவர் த. சித்தார்த்தன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் , இலங்கையில் உள்ள ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி , மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , சிவில் சமூக அமைப்புகள் என பல தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்து வருவதுடன் , அமைச்சு பதவியில் இருந்து நீக்கி அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி வருகின்றனர்.
ஐ. நா மனிதவுரிமை பேரவை கூட்டம் நடந்து வரும் நிலையில் அமைச்சரின் இச்செயலால் அரசாங்கம் நெருக்கடியை சந்தித்துள்ளது.
அதனால் அமைச்சரை பதவி விலகுமாறு அரசாங்க தரப்பினர் அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் விரைவில் தனது பதவியை ராஜினமா செய்வர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.







No comments