Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கால்நடை தீவன விலையேற்றத்தால் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ள பண்ணையாளர்கள்!




கால்நடை தீவனங்களின் விலை அதிகரிப்பினால் கால்நடை வளர்ப்போர் நஷ்டங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

தற்போது சந்தையில் பால் மா க்கான தட்டுப்பாடுகள் நிலவுவதனால் , பாலுக்கான கேள்வி அதிகரித்துள்ள போதிலும் , தீவன விலையேற்றத்தால் தாம் நஷ்டங்களையே எதிர்கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். 
 
மேலும் தெரிவிக்கையில் கடந்த ஜனவரி மாத கால பகுதியில் 2000 ரூபாய் முதல் , 2200 ரூபாய் வரையில் விற்பனையான தீவனங்கள் தற்போது 3700 ரூபாய்க்கும் அதிகமான விலைக்கு விற்கப்படுகின்றன. சில இடங்களில் தீவனங்களுக்கு தட்டுப்பாடும் நிலவுகின்றன.
 
அவ்வாறான நிலையிலையே கால் நடைக்கான தீவனங்களை வாங்கி கால் நடைகளுக்கு வைக்கிறோம். 
 
பாலினை யாழ்.கோ நிறுவனம் லீட்டரை 85 ரூபாய்க்கு கொள்வனவு செய்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. அதே போன்றே நெஸ்லே , மில்கோ நிறுவனங்களும் பாலினை நிறை அடிப்படையில் கொள்வனவு செய்து அவற்றை கொண்டு செல்கின்றனர். 
 
அதேவேளை உள்ளூரில் உள்ள சில தனியார் பால் விற்பனை நிலையங்கள் 85 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையில் கொள்வனவு செய்து 100 ரூபாய் தொடக்கம் 120 ரூபாய் வரையில் விற்பனை செய்கின்றனர். 
 
அதனால் பண்ணையாளர்கள்  பாலினை 85 ரூபாய் முதல் 120 வரையிலையே விற்பனை செய்ய கூடிய நிலை காணப்படுவதனால் , அதிகரித்துள்ள தீவன விலையேற்றத்தை எதிர்கொள்ள முடியாத நிலையில் பெரும் நஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர். 
 
எனவே அரசாங்கம் பண்ணையாளர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி தீவன விலையேற்றத்தை கட்டுப்படுத்தி , குறைந்த விலையில் தீவனத்தை பெற்றுக்கொள்ள ஆவண செய்யுமாறு பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

No comments