Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நெல்லியடியில் வறிய மக்களை திரட்டி உதவித்தொகை வழங்கியவர்கள் கைது!


ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் மக்களை கூட்டி உதவித்தொகை வழங்கிய குற்றச்சாட்டில் மூவரை நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர். 

வடமராட்சி பகுதியில் வாழும் வறிய மக்களுக்கு உதவி தொகையாக ஒருவருக்கு தலா 2ஆயிரம் ரூபாய் வீதம் ஒருவர் உதவி தொகை வழங்கியுள்ளார். 

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு மதவடி பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை உதவி தொகை வழங்கப்படுவதாக அறிந்த அவ்வூர் மக்கள் பலரும் அவ்விடத்தில் கூடியிருந்தனர். 

அது தொடர்பில் தகவல் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த நெல்லியடி பொலிஸார் உதவி தொகை பெற வந்த மக்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்திய பின்னர் , உதவி தொகை வழங்கியவர் , அதற்கான ஏற்பாடுகளை செய்தவர் உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். 

அதேவேளை குறித்த கொடை வள்ளல் ஒருவருக்கு தலா 2ஆயிரம் ரூபாய் வீதம் சுமார் 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு சுமார் 10 இலட்ச ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 








No comments