கொட்டிகாவத்த, முல்லோரியா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (26) காலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்ற சம்பவத்தில் 42 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்
பொலிஸார் போன்று வேடமணிந்த ஆயுததாரிகளே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






No comments