Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நகுலேஸ்வர சிறாப்பர் மடத்தில் பிள்ளையார் சிலை பிரதிஷ்டை


யாழ்ப்பாணம்‌ கீரிமலை நகுலஸ்‌வர சிறாப்பர்‌ மடத்தில்‌, புராதன பிள்ளையார்‌ சிலை ஒன்று சமய முறைப்படி நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.

போரின் போது உயர் பாதுகாப்பு வலயத்துக்கு உட்பட்டிருந்த கீரிமலை நகுலேஸ்வர ஆலயம் உட்பட்ட பல சைவசமய ஆலயங்கள் , சைவசமய மரபுரிமைச் சின்னங்கள் அழிவடைந்தன . இந்த நிலையில் சிறாப்பர் மடத்தைப் பாதுகாக்கும் நோக்குடன் தொல்லியல் திணைக்களத்தால் , மரபுரிமைச் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்டு சுற்றுவேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து  அதனை மீள் வடிவமைப்புக்குட்படுத்த சுப்பிரமணியர் கதிரவேலு (சிறாப்பர்) குடும்பத்தின் நேரடி வாரிசுகள் நிதிப்பங்களிப்பை வழங்கினர். அதற்கமைவாக சிறாப்பர் மடத்தில் காணப்பட்ட பழமை வாய்ந்த பிள்ளையார் சிலை, மீள அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.









No comments