Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ். பல்கலையில் 6 விரிவுரையாளர்களுக்கு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு!




யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்  6 சிரேஷ்டவிரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாப்பதவியுயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவைஒப்புதல் அளித்துள்ளது.

 யாழ்பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தகூட்டம் இன்று (30) சனிக்கிழமை காலைதுணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாதலைமையில் இடம்பெற்றதுஇதன் போதுபேராசிரியர் பதவி உயர்வுக்கு விண்ணப்பித்துமதிப்பீடுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளில் தகுதிபெற்ற 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களின் விபரங்கள்பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டனபல்கலைக்கழகமானியங்கள் ஆணைக்குழுவின்நடைமுறைகளுக்கமைய அந்தந்த விண்ணப்பத்தினங்களில் இருந்து பேராசிரியர்களின் பதவிஉயர்வைப் பேரவை அங்கீகரித்துள்ளது.

 அதன் படியாழ்பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் இருந்து சத்திர சிகிச்சைத் துறையின்சிரேஷ்ட விரிவுரையாளரும்யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணருமானவைத்திய கலாநிதி சிராஜேந்திராசத்திரசிகிச்சையில் பேராசிரியராகவும்மருத்துவத்துறைத் தலைவரும்சிரேஷ்ட விரிவுரையாளரும்,யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின்வைத்திய நிபுணருமான வைத்திய கலாநிதி என்சுகந்தன்மருத்துவப் பேராசிரியராகவும்மகப்பேற்றியல் மற்றும் பெண்நோயியல் துறைத்தலைவரும்,  சிரேஷ்ட விரிவுரையாளரும்யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்றியல் மற்றும் பெண்நோயியல் நிபுணருமானவைத்திய கலாநிதி  கேமுகுந்தன்மகப்பேற்றியல் மற்றும் பெண்நோயியல்பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்படுவதற்குப்பேரவை ஒப்புதலளித்துள்ளது

இவர்களுடன்கலைப் பீடத்தில் இருந்துபீடாதிபதியும்புவியியல் துறையின் சிரேஷ்டவிரிவுரையாளருமான கலாநிதி கேசுதாகர்தமிழ்த்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி(செல்விஎஸ்.சிவசுப்ரமணியம்பொருளியல்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதிஎஸ்.விஜயகுமார் ஆகியோரை முறையே  புவியியல்,தமிழ்பொருளியல் துறைகளில்பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கும்பேரவை ஒப்புதலளித்துள்ளது

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரேதடவையில் அதிக எண்ணிக்கையான  பேராசிரியர் பதவியுயர்வுகள் வழங்கப்படுவது இதுவே முதன்முறையாகும்

No comments