உலகமும் முழுவதும் பல நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ் எப் சமூக வலைத்தளங்கள் சமார் 6 மணித்தியாலங்கள் நேற்று (04) முடங்கியது.
உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் உபயோகப்படுத்தும் மூன்று செயலிகளும், நேற்று (04) இரவு 9.30 மணியளவில் திடீரென முடங்கியதால், சமூக வலைதள பயன்பாட்டாளர்களும், இணையவாசிகளும் பெரும் தவிப்புக்குள்ளாகினர்.
இலங்கை மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் ஒரே நேரத்தில் இந்தச் செயலிழப்பு ஏற்பட்டது.
குறித்த செயலிகள் மூன்றும் இன்று அதிகாலை 4.20 மணியளவில் வழமைக்கு திரும்பின.
No comments