மல்வத்துஹிரிபிட்டிய, பிட்டுவல்கொட பகுதியில் கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்காகி வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
அப்பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று (09) அதிகாலை நுழைந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்த பெண்களை தாக்கி அவர்களது கை, கால்களை கட்டிவிட்டு வீட்டில் கொள்ளையடித்து, தப்பி சென்றுள்ளனர்.
கொள்ளையர்களின் தாக்குதலில் மயக்கமடைந்த 77 வயதான வயோதிப பெண்ணை கம்பஹா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments