கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
துபாயில் இன்று (15) இரவு 07.00 மணிக்கு துபாய் இன்டர்நேஷ்னல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய , சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை எடுத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக டூ பிளஸ்ஸிஸ் 86, மொயின் அலி 37, ருத்ராஜ் 32, உத்தப்பா 31 ரன்களை எடுத்தனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் பந்து வீசிய சுனில் நரைன் 2 இலக்குகளையும் , ஷிவம் மாவி ஒரு இலக்கையும் விழுத்தினர்.
அதனை தொடர்ந்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இதனால் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 51, வெங்கடேஷ் ஐயர் 50 ரன்களை எடுத்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 2, பிராவோ 1, ஷர்துல் தாகூர் 3, தீபக் சஹார் 1 விக்கெட்டை எடுத்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் கோப்பையை நான்காவது முறையாக வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ். 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.






No comments