Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

முல்லையில் ஆரம்பித்த கடல் வழி போராட்டம் யாழில் நிறைவு!


மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக்கோரி முல்லைத்தீவில் ஆரம்பித்த போராட்டம் பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.
 
முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் இன்று காலை 7.15 மணியளவில் ஆரம்பித்த 
கடல்வழியான கண்டனப் போராட்டம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை துறைமுகத்தை இன்று காலை 9.30 மணியளவில் வந்தடைந்தது.
 
இழுவை மடி மீன்பிடி முறை, கடற்தொழில் மற்றும் நீரியல்வள சட்டத்தின் கீழ் 2016ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டதிருத்ததின் பின்னர் முற்றாக தடை செய்யப்பட்டிருந்தாலும் அது நடைமுறையில் இன்னமும் முழுமையாக செயற்படுத்தப்படாதுள்ளது. 
 
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களின் றோலர் மீன்பிடி முறையின் காரணமாக வடக்கு மீனவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீனவர்களுக்கு நீதி கோரி கடல்வழியாக இந்த கண்டனப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
இன்றைய போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சிறீதரன், சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள்,இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
 
இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் பலரும் கலந்து கொண்டனர்





No comments