Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கொடிகாமத்தில் விபத்து - முதியவர் உயிரிழப்பு - இளைஞன் படுகாயம்!


யாழ்ப்பாணம் கொடிகாமம் - கச்சாய் வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழந்துள்ளார். 

அப்பகுதியை சேர்ந்த செல்லையா சற்குணநாதன் (வயது 78) எனும் முதியவரே உயிரிழந்துள்ளார். 
 
கொடிகாமம் - கச்சாய் வீதி ஊடாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் , சைக்கிளில் பயணித்த குறித்த முதியவரை மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளனர். 
 
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிருஷ்ணகுமார் சுகிந்தன் (வயது 27) எனும் இளைஞனையும் , முதியவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்தனர். 
 
வைத்திய சாலையில் சிகிச்சை பயனின்றி முதியவர் உயிரிழந்த நிலையில் , இளைஞன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். 
 
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் , கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments