Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வலி. தெற்கு பிரதேச சபை தவிசாளர் மீது மோசடிக் குற்றச்சாட்டு


வலிகாமம் தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் க.தர்சன் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுத் தொடர்பில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப விசாரணையில் அவதானிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் அடிப்படையில் ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து முறையான விசாரணையை முன்னெடுக்க வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுப்பார் என்று அறிய முடிகிறது.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் க.தர்சன், மருதனார்மடம் பொதுச்சந்தையின் அபிவிருத்தியில் எஞ்சிய பொருள்களில் மோசடியில் ஈடுபட்டமை மற்றும் அலுவலக வாகனத்தை முறையற்றுப் பயன்படுத்தியமை தொடர்பில் பிரதேச சபை அலுவலகர் ஒருவரினால் யாழ்ப்பாணம் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்துக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப விசாரணையில் தவிசாளரினால் கடந்த ஓகஸ்ட் 28ஆம் திகதி பிரதேச சபை வாகனத்தில் மரங்கள் ஏற்பட்டு வரியப்புலத்தில் இறக்கப்பட்டுள்ளன. அதுதொடர்பில் சாரதியின் பதிவேட்டில் தகவல் தெரிவிக்கப்பட்ட போதும் அன்றைய தினம் பாதுகாப்பு உத்தியோகத்தரின் பதிவேட்டில் பதியப்படவுமில்லை அன்றைய வேறு ஒருவர் சாரதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் வழங்கப்பட்ட கற்கள் தொடர்பில் சரியான தகவல் வழங்கப்படவில்லை. கடந்த பெப்ரவரி 3ஆம் திகதி இருவேறு உழவு இயந்திரங்கள் மூலம் கற்கள் ஏற்றிப்பறிக்கப்பட்டமை தொடர்பில் வாகன ஓட்டப்பதிவேட்டில் பதியப்படாமை தொடர்பிலும் விளக்கம் கோரப்படவேண்டும்.

பாதுகாப்பு உத்தியோகத்தரின் அசைவுப் பதிவேட்டில் கடந்த பெப்ரவரி 22ஆம் திகதி டிப்பர் வாகனம் ஒன்றில் (10 வீல்) சாரதி ஒருவர் இரண்டு தடவைகள் கற்கள் ஏற்றிவந்ததாக பதியப்பட்டுள்ளது. எனினும் அந்த வாகனம் சபைக்குச் சொந்தமானதல்ல.

இவை போன்ற பல்வேறு அவதானிப்புகளை வெளிப்படுத்தும் அறிக்கை யாழ்ப்பாணம் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவை தொடர்பில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தனிநபர் ஆயம் உள்ளூராட்சி ஆணையாளரினால் அமைக்கப்பட்டு முறையான விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

No comments