Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ் - கண்டி நெடுஞ்சாலையில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய நடைமுறை!


வடமாகாணத்தின் ஏ9 பிரதான வீதியின் இருபுறங்களிலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பளிஹக்கார விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.


அந்த அறிவிப்பில் வன்னி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிரிவுகளிலும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணையுடன் பொருத்தமான வாகனத் தரிப்பிடங்களை அடையாளம் கண்டு இது தொடர்பில் அறிவிக்குமாறு சாரதிகளிடம் கோரப்பட்டுள்ளது.

பணி முடியும் வரை சாரதிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பலகைகள் வைக்க வேண்டுமென்றும் இப்பணியை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு பொலிஸ் போக்குவரத்து உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துமாறு அவர் பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வட மாகாணத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை  134 மரணங்கள் வீதி விபத்துக்கள் மூலம் பதிவாகியுள்ளன. 23 பேர் பலத்த காயங்கள் மற்றும் 308 பேர் சிறிய காயங்களுடன் தப்பியுள்ளனர்.

ஆகவே வாகனம் ஓட்டும் முன் பொதுமக்கள் கவனமாக இருக்கவும், எப்போதும் இருக்கை பட்டிகளை அணியவும், பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்கவும், சரியான பாதை வேக வரம்புகளை உறுதி செய்யவும், சாலை விபத்துகளை குறைக்கவும், வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பளிஹக்கார, அனைத்து சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments