Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக போராட்டம்


வடக்கு மாகாண ஆளுநர் செலயகத்திற்கு முன்பாக  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை கண்டனப் போராட்டம் ஒன்று  ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

யாழ் மாவட்டத்தில் விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் பெரும் இடர்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் அரசினால் உர இறக்குமதி  நிறுத்தப்பட்டுள்ளதோடு  கால்நடைகளுக்கான  தீவனம் பெறுவதில்  இடர்பாடு காணப்படுவதனால்  விவசாயிகள் கால்நடை வளர்ப்போர்,பண்ணையாளர்கள்  பெரும் இடரினை எதிர்நோக்கி வருகின்றார்கள் 

விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு  நீதி கோரி, கண்டன போராட்டத்தில் ஈடுபடவுள்ளதோடு  வலி வடக்கு பகுதியில்  நல்லாட்சி அரசாங்கத்தின் போது தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில்  முதல் கட்ட நிதி மட்டுமே பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

 மேலதிகமான  நிதி வசதிகள் இன்றுவரை  மக்களுக்கு வழங்கப்படவில்லை எனவே பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றிணைந்து மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட இணைப்பாளர் எஸ். பிரபாகரன் தெரிவித்தார்.




No comments