Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சகோதரனின் அடையாள அட்டையை பயன்படுத்தி மாணவியுடன் ஹோட்டலில் தங்கிய மாணவன் கைது!


தனது மூத்த சகோதரனின் அடையாள அட்டையை பயன்படுத்தி சக மாணவியுடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த மாணவன் கைது செய்யப்பட்டு நீதவானின் உத்தரவில் கண்டி - உடுநுவர சிறுவர் தடுப்பு மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 
 
கம்பளை நகரில் உள்ள பிரபல்யமான பாடசாலையில் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவனும் , மற்றுமொரு பிரபல மகளீர் பாடசாலையில் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவியும் கடந்த 08 மாத காலங்களாக காதலித்து வந்துள்ளனர், 
 
அந்நிலையில் கடந்த 19ஆம் திகதி மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக இருவரும் வீடுகளில் கூறிவிட்டு , நாவலப்பிட்டியாவில் உள்ள நீர் வீழ்ச்சி ஒன்றுக்கு சென்றுள்ளனர். அங்கு மாலை வரை பொழுதை கழித்துள்ளனர். 
 
அதன் பின்னர் அங்கிருந்து நுவரெலியா சென்று , அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் அறை ஒன்றை வாடகைக்கு பெற்று தங்கியுள்ளனர். சிறுவர்களுக்கு அறை வாடகைக்கு வழங்க மாட்டார்கள் என்பதனால்  , மாணவன் தனது மூத்த சகோதரனின் தேசிய அடையாள அட்டையை திருடி வந்து , அந்த அடையாள அட்டையை பயன்படுத்தி அறையை வாடகைக்கு பெற்று இரு மாணவர்களும் இரண்டு நாட்கள் தங்கியிருந்துள்ளனர். 
 
அறைவாடகை உள்ளிட்ட செலவுகளுக்காக மாணவனின் ஒன்லைன் வகுப்புக்களுக்காக , வீட்டில் வாங்கி கொடுத்திருந்த கையடக்க தொலைபேசியை 7ஆயிரம் ரூபாய்க்கு மாணவன் விற்று உள்ளான். 
 
அதேவேளை மேலதிக வகுப்புக்கு சென்ற தனது மகள் வீடு திரும்பவில்லை என மாணவியின் தாயார் , கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். 
 
அந்நிலையில் , மாணவி இரண்டு நாட்கள் கழித்து , வீடு திரும்பிய நிலையில் , பொலிஸார் மாணவியிடம் விசாரணைகளை முன்னெடுத்த போதே மாணவி முழு விபரத்தையும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 
 
அதனை அடுத்து மாணவியுடன் சென்ற மாணவனை கைது செய்த பொலிஸார் , கம்பளை நீதிமன்றில் முற்படுத்தினர். விசாரணைகளை முன்னெடுத்த நீதவான் , மாணவனை சிறுவர் நிலையத்தில் தடுத்து வைக்க உத்தரவிட்டதுடன் , மாணவியை வைத்திய பரிசோதனைக்காக கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்க உத்தரவிட்டார். 

No comments