திருகோணமலையில் போதைப்பொருள் வியாபாரியை துரத்தி சென்ற போது , தவறி விழுந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழந்துள்ளார்.
தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , கஜ்ஜி முகமது தாரிக் (வயது 49) எனும் பொலிஸ் உத்தியோகஸ்தரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிப்பொத்தானை எனும் இடத்தில் போதை பொருள் வியாபாரம் நடைபெறுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்திருந்தனர்.
பொலிஸாரை கண்டதும் , போதைப்பொருள் வியாபாரி அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார். தப்பியோடியவரை பொலிஸார் துரத்தி சென்ற வேளை , குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தவறி விழுந்துள்ளார்.
அதன் போது , படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தரை மீட்ட சக பொலிஸார் அவரை கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை துரத்திச்சென்ற போதைப்பொருள் வியாபாரியையும் பொலிஸார் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments