Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மோட்டார் சைக்கிளில் ஏற்றிய நபர் தவறாக நடக்க முயற்சி - பெண் படுகாயம்!


வீதியில் நின்றுகொண்டிருந்த குடும்ப பெண்ணை ஏற்றிச் சென்ற நபர் அவருடன் தவறாக நடக்க முயற்சித்த நிலையில் குறித்த பெண் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே குதித்த நிலையில் படுகாயமடைந்துள்ளார். 

குறித்த சம்பவம் கடந்தவாரம் பூநகரி 10ம் கட்டை சந்திக்கும், முட்கொம்பன் கிராமத்திற்கும் இடையில் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த பெண் பூநகரி மருத்துவமனைக்கு சென்றுவிட்டு பேருந்துக்காக காத்திருந்துள்ளார். 

பாலுட்டும் குழந்தை வீட்டில் இருந்தமையால் அவசரமாக வீடு செல்லவேண்டியதால் வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிளை மறித்து வீடு செல்ல உதவி கேட்டுள்ளார். இதனையடுத்து குறித்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் ஏற்றிய நபர், வழியில் அந்த பெண்ணுடன் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிளில் இருந்து அந்த பெண் குதித்துள்ளார். இதன்போது பெண்ணின் முகம் உட்பட பல இடங்களில் காயமடைந்தார். 

எனினும் சந்தேகநபர் தப்பி சென்றுள்ள நிலையில், காயமடைந்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

No comments