கடலுக்கு சென்ற தந்தையும் மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
வாகரை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காயங்கேணி கடற்பரப்புக்கு நேற்றைய தினம் இயந்திர படகில் மீன் பிடிக்க சென்ற தந்தையும் மகனும் காணாமல் போயிருந்தனர்.
காணாமல் போன இருவரையும் சக மீனவர்கள் தேடிய நிலையில் அவர்களின் இயந்திர படகு மற்றும் வலை என்பன அநாதரவாக காணப்பட்ட நிலையில் மீட்டுள்ளனர்.
தொடர்ந்தும் காணாமல் போன மீனவர்களை தேடிய நிலையில் , இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
காயங்கேணி சுனாமி வீட்டுத்திட்டத்தை சேர்ந்த 55 மற்றும் 18 வயதுடைய இருவருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.