பளை - இந்திராபுரத்தில் புதுவருட தினத்தில் வீடொன்றை உடைத்து உட்புகுந்த திருடர்கள் அரிசி, தேங்காய், பருப்பு ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
வீட்டின் உரிமையாளர் வெளி மாவட்டம் ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்நுழைந்த திருடர்கள், அங்கிருந்து அரிசி, பருப்பு மற்றும் தேங்காய் ஆகியவற்றை திருடி சென்றுள்ளதாக முறைப்பாட்டாளர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments