கல்வியங்காடு பிறிமியர் லீக்கின் (கே.பி.எல்) இரண்டாவது பருவகால தொடரின் வெற்றிக் கிண்ணத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கோப்பாய் பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா சிறிகுமரனின் கல்வியங்காடு ரைனோஸ் (கே.ஆர்) அணி தனதாக்கியுள்ளது.
ஞானபாஸ்கரொதய சங்கம் நடத்திய கல்வியங்காடு பிறிமியர் லீக்கின் (கே.பி.எல்) இறுதிப் போட்டி நேற்று புதன்கிழமை இரவு 7.00 மணிக்கு ஜீ.பி.எஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இப் போட்டியில் கல்வியங்காடு ரைனோஸ் (கே.ஆர்) அணியை எதிர்த்து கல்வியங்காடு நைட் ரைடஸ் (கே.கே.ஆர்) அணியும் மோதிக் கொண்டன.
நாணயசுழல்ச்சியில் வெற்றி பெற்ற கல்வியங்காடு ரைனோஸ் (கே.ஆர்) அணியின் தலைவர் முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தார். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாரிய கல்வியங்காடு நைட் ரைடஸ் (கே.கே.ஆர்) அணி நிர்ணைக்கப்பட்ட 10 ஓவர்களில் 72 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
73 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கல்வியங்காடு ரைனோஸ் (கே.ஆர்) அணியினர் 9 பந்துப்பரிமாற்ற முடிவிலேயே வெற்றி இலக்கை அடைந்தனர். இப் போட்டியின் ஆட்டநாயகணாக கல்வியங்காடு ரைனோஸ் (கே.ஆர்) அணி வீரர் மதுசன் தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் கல்வியங்காடு பிறிமியர் லீக்கின் (கே.பி.எல்) தொடர் ஆட்ட நாயகணாக கல்வியங்காடு ரைனோஸ் (கே.ஆர்) அணி வீரர் தாருகாசன் தெரிவு செய்யப்பட்டார்.
இத் தொடரில் வெற்றி பெற்ற கல்வியங்காடு ரைனோஸ் (கே.ஆர்) அணிக்கான வெற்றிக் கிண்ணத்தை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் வழங்கி வைத்தார்.
No comments