கத்தோலிக்க திருச்சபையின் சமூகத் தொடர்பு ஆண்டாக இந்த ஆண்டு தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக கருத்தமர்வும் கலந்துரையாடலும் சில்லாலை பங்கு மட்ட அருட்பணிப்பேரவையினருக்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது
ஆலய பங்கு தந்தை அருட்பணியாளர் லியோ ஆம்ஸ்ரோங் அடிகளாரின் ஏற்பாட்டில் சமூக தொடர்பு ஆண்டும் எமது குடும்பங்களும் -என்ற தெனிப்பொருளில் யாழ் மறைமாவட்ட சமூக தொடர்பாடல் இயக்குனர் அருட்பணி ஸ்ரிபன் அடிகளாரும் , சமூக தொடர்பு சாதனங்கள் குடும்பங்களில் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் செலுத்தும் பங்களிப்புக்கள் என்ற தொனிப்பொருளில் யாழ் மறைமாவட்ட அகவொளி குடும்ப நல இயக்குனர் இம்மனுவேல் டேவிற் அடிகளாரும் , மறைந்த திருத்தந்தையின் இறுதி ஏடாகிய கூட்டொருங்கியக்க ஏடும் தற்கால திருத்தந்தையின் ஏழைகள் சார்பாகிய ஏடு தொடர்பாக கொழும்புத்துறை புனித சவேரியார் குருத்துவகல்லூரி விரிவுரையாளர் அருட்பணியாளர் அலோய் அடிகளாரும் கருத்துகளை முன்வைத்தார்கள்
இந் நிகழ்வுகளில் சில்லாலை பங்குமட்டத்திற்குட்பட்ட சில்லாலை ,சங்கானை மூளாய் பங்குகளின் அருட்பணிப் பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.















No comments