Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். போதை மாத்திரைகள் வாளுடன் இளைஞர்கள் கைது


யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான போதை மாத்திரைகள் , வாள் மற்றும் கையடக்க தொலைபேசிகளுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் நகர் பகுதி மற்றும் நல்லூர் பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 860 போதை மாத்திரைகள் , வாள் மற்றும் நான்கு கையடக்க தொலைபேசிகளுடன் நான்கு இளைஞர்களை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அவர்கள் 24 தொடக்கம் 28 வயதுடையவர்கள் எனவும் , யாழ். நகர் பகுதிகளை அண்மித்த பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர். 

அதேவேளை கைது செய்யப்பட்டவர்களையும் , மீட்கப்பட்ட போதை மாத்திரைகள் வாள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

No comments