காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த வவுனியா பூம்புகார் கல்மடு பகுதியை சேர்ந்த கருப்பையா ராமாய் (வயது 78) நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், இன்று (21) காலமானர்.
இவரது வளர்ப்பு மகனான ரா.இந்திரபாலன் (வயது 38) கடந்த 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து வெள்ளைவானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
அவ்வாறு காணாமலாக்கப்பட்ட உறவினர்களைத் தேடி வடக்கு, கிழக்கில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் உணவுத்தவிர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.
வவுனியாவில் 1799 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சிமுறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டத்திலும் கருப்பையா ராமாய் என்றத் தாய் கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்தி போராடியிருந்தார்.
இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் இன்று (21) காலமாகியுள்ளார்.
No comments