சிறிபாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஶ்ரீ பாலபந்ததல பகுதியில் களு கங்கையில் நீராடிக் கொண்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
அங்குராவதொட்ட பகுதியை சேர்ந்த 22 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதேவேளை 10 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போன சிறுவனை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் சிறிபாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments