கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புண்ணை நீராவி , நாதன் குடியிருப்பு பகுதியில் தீயில் எரிந்து தாயும் , மகளும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியை சேர்ந்த ஆனந்தராசா சீதேவி (வயது 47) மற்றும் அவரது மகளான ஆனந்தராசா லக்சிகா (வயது 17) ஆகிய இருவருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் வசித்து வந்த வீடு நேற்று நள்ளிரவை அண்மித்த நேரத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது. அதன் போதே அதனுள் இருவரும் அகப்பட்டு தீயில் எரிந்து உயிரிழந்துள்ளனர்.
வீடு தீ பிடித்து எரிந்தமைக்கு காரணம் விபத்தா அல்லது , கொலையா எனும் கோணத்தில் தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments