Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு தமிழ் மொழி மூல கல்வெட்டு இடமாற்றம்!




ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு தமிழ் மொழி மூல கல்வெட்டு இடித்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது, 

வவுனியா பல்கலைக்கழகத்திற்கு நாளைய தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே விஜயம் மேற்கொண்டு அங்குராப்பணம் செய்து வைக்கவுள்ளார்.

அதன் போது பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள சுற்றுவட்ட பாதையின் நடுவில் முக்கோண வடிவில் தூண் ஒன்று கட்டப்பட்டு அதன் முகப்பு பக்கத்தில் தமிழ் மொழியும் மற்றைய பக்கங்களில் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளிலான நினைவு கல் வெட்டு பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. 


நாளைய தினம் ஜனாதிபதி குறித்த கல் வெட்டினை திரைநீக்கம் செய்யவுள்ள நிலையில் முகப்பு பக்கத்தில் இருந்த தமிழ் மொழி மூல கல்வெட்டினை இடித்து அவ்விடத்தில் இருந்து பெயர்த்து சிங்கள மொழி கல் வெட்டு இருந்த பகுதிக்கு மாற்றியதுடன் , முகப்பு பக்கத்திற்கு சிங்கள மொழி கல்வெட்டினை பதிக்கும் பணிகள் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது. 

இன்றைய தினம் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்திருந்த இராணுவ அதிகாரிகளின் பணிப்பின் பேரிலையே கல்வெட்டினை மாற்றி பதிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

No comments