யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் 265 போதை மாத்திரைகளுடன் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தெல்லிப்பளை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மல்லாகம் பகுதியில் உள்ள வீடொன்றை சுற்றி வளைத்து தேடுதல் நடத்திய போது , வீட்டில் இருந்து 265 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.
அதனை அடுத்து வீட்டில் இருந்த நபரை கைது தெல்லிப்பளை பொலிசாரிடம் ஒப்படைத்ததுடன் மீட்கப்பட்ட போதைப்பொருளையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
No comments