Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சிறிய கத்தியை காட்டி மிரட்டிய கொள்ளையனை பெரிய கத்தியை காட்டி விரட்டிய பெண்!


வெதுப்பகத்தில் வேலை செய்யும் பெண்ணிடம் சிறிய கத்தியை காண்பித்து கொள்ளையிட முயன்றவரை பாண் வெட்டும் கத்தியை காண்பித்து குறித்த பெண் விரட்டி அடித்துள்ளார். 

ஹக்மன பிரதேசத்தில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

வெதுப்பகத்திற்கு வந்த நபர் ஒருவர் , அங்கு நின்ற பெண்ணிடம் சிறிய கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட முயன்றுள்ளார். 

அதன் போது குறித்த பெண் பாண் வெட்டும் கத்தியை எடுத்து , தன்னை மிரட்டியவரை அச்சுறுத்தியுள்ளார். 

தன்னிடம் இருந்த கத்தியை விட பெரிதாகவும் , கூராகவும் அப்பெண்ணின் கையில் உள்ள கத்தி இருந்தமையால் , அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். 

சம்பவம் தொடர்பில் ஹக்மன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் , குறித்த நபர் வெதுப்பகத்திற்கு வந்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தையும் அப்பெண் பொலிசாரிடம் கூறியுள்ளார். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments