Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிற்கு இணைக்கப்பட்ட பிரதிநிதி டீயும் வடையும் சாப்பிட்டு போகலாம்!


பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒரு பிரதிநிதி நியமிக்கப்பட்டடார் என்ற செய்தியை நான் மறுக்கவில்லை. ஆனால் அந்த நியமனத்துக்கு கொடுக்கப்பட்ட வியாக்கியானம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதமர் அலுவலக பிரதிநிதி  இங்கு வந்து கூட்டத்தில் பங்கேற்று டீயும் வடையும்  சாப்பிடலாம் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் அலுவலகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே  அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒரு பிரதிநிதி நியமிக்கப்பட்டடார் என்ற செய்தியை நான் மறுக்கவில்லை. ஆனால் அந்த நியமனத்துக்கு கொடுக்கப்பட்ட வியாக்கியானம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பல ஊடகங்களிலும் இந்த செய்திகள் வெளியானது. இது தொடர்பாக ஊடகங்களை தொடர்புகொண்டபோது நியமிக்கப்பட்டவர் தெரிவித்த விடயங்களையே தெரிவித்தோம் என்றனர்.

பிரதமர் அலுவலகத்தின் பிரதிநிதியாக அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கும் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியும் என்பதுடன்

இலகுவான இணைப்புக்காகவே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்றும் உள்ளது.இதை நான் வரவேற்கின்றேன்.மக்களின் தேவைகள் நேரடியாக பிரதமர் அலுவலகத்துக்கு தெரியவரும் போது அதில் பல நல்ல விடயங்கள் உள்ளது.ஆனால் அதற்கு அரசியல் உள்நோக்கத்தோடு கொடுக்கப்பட்ட வியாக்கியானம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. இந்த செய்தி மாத்திரம் அல்ல. தொடர்ச்சியாக எம்மீது அவதூறு பரப்பிய பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இணைப்பாளராக உள்ள என்னை வளர்த்து விடுகின்றீர்கள் என என்னுடைய செயலாளருக்கும் அவர் செய்தியை அனுப்பி இருக்கின்றார்.

தன்னுடைய அரசியல் வளர்ச்சிக்காக

பிரதமர் அலுவலகத்தையும் ஊடகங்களையும் பயன்படுத்தி பிழையான செய்தியை அவர் கூற முற்படுகிறார்.

கடந்த காலங்களில் இந்த அலுவலகத்தின் ஊடாக செய்யப்பட்ட வேலைகளை விட பல விடயங்களை தற்போது செய்ய கூடியதாகவுள்ளது.

நான் செய்தது பிழை ஆனால் அதற்கு நான் முழு பொறுப்பு ஏற்கிறேன். ஆனால் பொய் செய்தியைச் சொல்லி சுயலாப அரசியல் செய்வதற்கு இணைப்பாளர் என்பவருக்கு ஒருசிலர் உடந்தையாக இருக்கின்றனர்.

ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஜனாதிபதி பிரதமரின் வேலைத்திட்டத்தை நான், என் கனவு யாழ் என்று என்னுடைய வேலைத்திட்டமாக மாற்றுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதனை நாமல் ராஜபக்சவின் முகப்புத்தகத்தில் பகிர்ந்திருந்தார். இதனை நான் நாமல் ராஜபக்சவுடன் கேட்டபோது அது தனது முகப்புத்தகம் அல்ல. அது பலர் நடத்துகின்ற முகநூல் என்றார்.அவருக்கு தெரியாமலேயே பல விடயங்கள் நடப்பதாகவே நான் நினைக்கின்றேன்.

மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விட்டுவிட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போட்டி போட்டுக் கொண்டிருப்பது எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திவிடும்.

ஒரு சிலர் வாய்ப்புகளைப் பயன்படுத்தி அரசியல் காய்நகர்த்தல்களை செய்வதாகவே நான் பார்க்கின்றேன். இவரைப் பற்றிச் சொல்வதானால் யாழ் மாவட்டத்திற்கும் ஊடகங்களுக்கும் புதிதாக இருக்கலாம். எனக்கு நீண்டகாலமாக தெரியும். நாமல் ராஜபக்சவின் கிளிநொச்சி மாவட்ட செயலாளராக இருந்தார். நாமல் ராஜபக்ச கிளிநொச்சியில் செய்த வேலைகளின் ஆதரவை குறைக்க காரணமாக இருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இவர் 2013ல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கான காரணத்தை நீங்கள் அவர்களிடமே கேட்டு பாருங்கள்.மக்களுக்கு நல்லது செய்ய விரும்புவர்களை தாக்கி அதிலிருந்து முன்னேற நினைப்பதை மிகவும் தவறான விடயமாக நான் பார்க்கின்றேன்.

பிரதமர் அலுவலகத்தில் இருந்து அவர்கள் சார்பில் ஒரு பிரதிநிதி நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இங்கு வந்து கூட்டத்தில் பங்கேற்று வடையும் ரீயும் சாப்பிடலாம் என்றார்.

No comments