யாழ்.நவாலி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹயஸ் ரக வாகனம் நேற்று திங்கட்கிழமை இனந்தெரியாத நபர்களினால் அடித்து நொறுக்கப்பட்டது.
வீட்டின் முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் , அடித்து நொறுக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக வாகன உரிமையாளர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






No comments