ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மேலும் 7 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வைக் கோரி இன்று அதிகாலை 1.30 மணி முதல், கண்டி - கொழும்பு ரயில் மார்க்கத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஏனையோர் ரம்புக்கனை - கேகாலை, குருநாகல் மற்றும் மாவனெல்ல வீதிகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
15 மணி நேரமாக இடம்பெற்ற போராட்டத்தில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் இடம்பெற்றதையடுத்து, ரம்புக்கனை பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தினர்.
அதனை தொடர்ந்து போராட்டக்காரர்களை நோக்கி பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
குறித்த சம்பவங்களினால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகின்றது.















No comments