Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மக்கள் போராட்டங்களில் குதித்துள்ள நிலையில் வடக்கில் இலங்கை வங்கி ஊழியர்கள் கொண்டாட்டத்திற்கு தயார்!


நாடளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடியினை எதிர்கொள்ள முடியாது மக்கள் திணறி, வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுத்த்து வரும் நிலையில் , இலங்கை வங்கி தமது ஊழியர்களுக்கு இடையிலான வருடாந்திர விளையாட்டு போட்டியினையும் , மாபெரும் விருந்துபசார நிகழ்வினையும் நடாத்த உள்ளனர். 

வடமாகாணத்தில் உள்ள தமது ஊழியர்களுக்கு இடையில் குறித்த போட்டியினை கடந்த 3ஆம் திகதி நடாத்த ஏற்பாடு செய்திருந்த நிலையில் , நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமையால், அது நாளைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடாத்தவுள்ளனர். 

துரையப்பா விளையாட்டு அரங்கில் மாலை ஆரம்பமாகும் ஊழியர்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியானது ,மாலை 5 மணியளவில் முடிவடைந்ததும் , தொடர்ந்து ஊழியர்களுக்கு இடையிலான விருந்துபசார நிகழ்வும் இடம்பெறவுள்ளது. 

நாடளாவிய ரீதியில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி , போராடங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், தாமும் எரிபொருள் , எரிவாயு தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துள்ளமையால் தற்போது இந்த நிகழ்வினை நடத்தாது , பிரிதொரு தினத்தில் நடாத்துமாறு பெரும்பாலான ஊழியர்கள் கோரிய போதும், அவர்களின் கோரிக்கையை மீறி நாளை மிகப்பெரியளவில் நிகழ்வினை நடாத்த வங்கி உயர்அதிகாரிகள் ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments