பெலியத்த, தாரபெரிய, நிஹிலுவ பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று (23) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் நிஹிலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் வீட்டில் வைத்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்