Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நாட்டை முடக்குங்கள்!


தற்போதைய சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுத்து நாட்டை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தினார்.

கொழும்பில் நேற்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையை உடனடியாக நிபுணர்கள் சபையின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டும் என்றும் வளமான நாட்டில் எழுபத்தைந்து மில்லியன் மின் நுகர்வோர், ஒரு நாளைக்கு 13 மணிநேரம் மின்சாரம் இன்றி வாழ வேண்டியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

மின்சாரம் இன்மையால் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான சிறுகடைகளும் இலட்சக்கணக்கான சிறு மற்றும் நடுத்தர தொழில்களும் இன்று அழிந்து போகும் எனவும் குறிப்பிட்டார்.

குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்தும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான உணவு விற்பனை நிலையங்கள் இன்று பாரிய நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும், உணவு மற்றும் மருந்துகளின் தரம் தொடர்பில் பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் கூறினார்.

மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடியை இந்த அரசாங்கம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை எனவும் மேலும் குறிப்பிட்டார்.

No comments