அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்வதற்கு தயார் என ஆளும் தரப்பு தயராக உள்ளதாக, நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சிகள் நாட்டினை மீட்பதற்கான செயற்பாட்டில் பங்கேற்பதற்கு தயாராக இல்லாத நிலையில், இப்போது நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றார்கள்.
அவர்கள் கொண்டு வரும் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றிபெற்று நாடாளுமன்ற பெரும்பான்மையை காண்பிப்பார்களாயின் அவர்களிடத்தில் ஆட்சியை ஒப்படைப்பதற்கு தயாராக உள்ளோம்.
ஆனால், அவர்கள் ஆட்சியைப்பொறுப்பு எடுப்பதற்கு தயாராக இல்லையென்றும் நம்பிக்கையில்லாத பிரேரணை மூலமாக அரசியல் இலாபம் அடைவதற்கே முயற்சிக்கின்றார்கள்
ஆகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்வோம் என மேலும் தெரிவித்துள்ளார்.







No comments