Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

உலகில் உயரமான முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்


உலகில் மிக உயரமான முருகன் சிலைக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

சேலம் முத்துமலை முருகன் கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட உலகின் மிக உயரமான முருகன் சிலையின் உயரம் 146 அடிகள் ஆகும். 

ஆத்தூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபரான முத்துநடராஜன் என்பவர் , திருவாரூரை சேர்ந்த ஸ்தபதி தியாகராஜன்,என்பவரை கடந்த 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 06ஆம் திகதி  அழைத்து வந்து, உலகில் உயரமான முருகன் சிலையை, 3 கோடி ரூபாய் மதிப்பில் கட்ட முடிவு செய்தார். 

சிலை அமைக்கும் பணிகள் ஆரம்பமான நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு முத்துநடராஜன் உடல்நல குறைவால் உயிர் நீத்தார். 

அதனை தொடர்ந்து சிலை அமைக்கும் பணிகளை அவரது பிள்ளைகள் முன்னின்று நடத்தினார்கள். 

இந்நிலையில், இன்று காலை, 10:30 மணிக்கு, 146 அடி உயர முத்துமலை முருகன் சுவாமி, மஹா கணபதி உள்ளிட்ட அறுபடை முருகன் ஆகிய சன்னதிகளில், மஹா கும்பாபிஷேகம் நடந்தது. 

உயரமான முருகன் சிலைக்கு கோவில் நிர்வாகம் சார்பில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஆசி பெற்றனர். 

அதேவேளை மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலை முருகன் சிலையே இதுவரை உலகில் மிக பெரிய முருகன் சிலையாக இருந்தது. அதன் உயரம் 140 அடிகளாகும். சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள முருகன் சிலையானது மலேசியா முருகன் சிலையை விட 6 அடி உயரம் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. 







No comments