கேகாலை - ரம்புக்கணை பகுதியில் போராட்டம் நடத்தியோர் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் ரம்புக்கணை பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு மறு அறிவித்தல் வெளியாகும்வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. 8 பொலிஸார் உள்ளிட்ட 24 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக, கேகாலை வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.
அத்துடன், அப்பகுதியில் அமைதியை பேணுவதற்கு பொலிஸார் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இராணுவமும் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.







No comments