Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!


நாட்டின் நிலையை கருத்தில் கொண்டும், அன்னையரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும்,எமது பேரணிக்கான திகதி மாற்றப்பட்டுள்ளது என்றும் புதிய திகதி அனைவரும் கலந்து முடிவு செய்து அறிவிக்கப்படும் என வடகிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் ஆ.லீலாதேவி தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்றைய தினம் சனிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

 மேலும் தெரிவிக்கையில்,

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் வந்தபோது,  காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மை நிலையை அறியும் முகமாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்த முற்பட்ட தாய்மார்கள், வயோதிபப் பெண்கள் மீது காவற்துறையினர் மிலேச்சத்தனமான தாக்குதலை 
கண்டித்து நீதி கிடைக்க வேண்டியும் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் முற்றவெளியை நோக்கி செல்ல கண்டனப் பேரணிக்கு அழைப்பு  விடுக்கப்பட்டது.

ஆனாலும் நாட்டின் நிலையை கருத்தில் கொண்டும், எமது அன்னையரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும்,எமது பேரணிக்கான திகதி மாற்றப்பட்டுள்ளது.

புதிய திகதி அனைவரும் கலந்து முடிவு செய்து அறிவிக்கப்படும்.சிரமத்திற்கு மன்னிக்கவும்.  தங்கள் ஒத்துழைப்பு தொடரவேண்டும் என்றார்.

No comments