Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஊடகவியலாளர் நடேசனின் நினைவேந்தலும் நூல் வெளியீடும்


யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நாட்டுப்பற்றாளர் ஜயாத்துரை நடேசன் 18வது நினைவேந்தலும் நூல் வெளியீடும் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

நாவலர் கலாச்சார மண்டபத்தில் மாலை 4 மணியளவில்  யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன்,தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன. 

அந்நிகழ்வில் நடேசன் தொடர்பில் அவருடன் ஊடகப்பணியாற்றிய சக ஊடகவியலாளர்கள், 

செயற்பாட்டாளர்களென பலரது நினைவுகூரலுடன் வெளிவந்துள்ள நூல் அறிமுகமும் வெளியீடும் நடைபெற்றது.

அதேவேளை “நடேசனின் ஊடகத்துறை பயணம்” தொடர்பிலான நினைவுரைகளுடன் ஞாபகார்த்த நினைவுப்பேரூரையினை யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கோசலை மதன்,ஆற்றினார். 

நிகழ்வின் இறுதியாக ஊடகவியலாளர்களது தயாரிப்பில் உருவாக்கப்பட்ட ஆவணப்பட காட்சிப்படுத்தல் இடம்பெற்றது.

வுடமராட்சி கரவெட்டியில் பிறந்த மூத்த ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசன் 2005ம் ஆண்டின் மே 31ம் திகதி மட்டக்களப்பில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.



















No comments