Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மாற்றுவலுவுடையோர் உட்பிரவேசிப்பதற்கான வசதிகளை மேற்கொள்ளவேண்டும்


 மாற்றுவலுவுடையோருக்கான அணுகும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தல் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வடமாகாண பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்திக் குறிப்பில்,

 மாற்றுவலுவுடையோர் பொது இடங்களுக்கு பிரவேசிப்பதற்குரிய அனுகும் வசதிகள் 
ஏற்படுத்துவதற்கு சட்டங்களும், ஒழுங்குவிதிகளும், உயர்நீதிமன்ற தீர்ப்பும் வலுவில் உள்ள 
நிலையில் பல அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் மாற்றுவலுவுடையோருக்கான அனுகும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்காமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

குறிப்பாக 1978ஆம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் யாப்பின் பிரகாரம் 3 ஆம் 
அத்தியாயத்தின் உறுப்புரை 12இன் உப பிரிவு 2இன் பிரகாரமும் 1996 ஆம் ஆண்டு 28ஆம் இலக்க மாற்றுவலுவுடையோரினுடைய உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்டத்தின் பிரகாரமும் இலங்கையில் மாற்றுவலுவுடையோரது உரிமைகளை பாதுகாப்பது சகலரதும் பொறுப்பாகும். 

அத்துடன் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிவிசேட வத்தமானி இல 1465/15 
(ஒக்டோபர் 17 2018) பிரகாரம் சகல அரச திணைக்களங்களிலும்மாற்றுவலுவுடையோருக்கான அணுகுதல் வசதியை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பில் பல ஒழுங்கு விதிகள்
உருவாக்கப்பட்டுள்ளன.

 அத்துடன் இலங்கை உயர் 
நீதிமன்றத்தில் வழக்கிலக்கம் SCFR NO 221/2009 இன் தீர்ப்பில் மாற்றுவலுவுடையோருக்கு அணுகுதல் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது 
தொடர்பில் மிக தெளிவான தீர்ப்பினை வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் மாற்றுவலுவுடையோருக்கான அனுகும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்காமை தொடர்பில் 1996/21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டம் பிரிவு 14 இன் பிரகாரம் ஆணைக்குழுவின சொந்த பிரேரணை அடிப்டையில் இலங்கை மனித உரிமைகள்
ஆணைக்குழுவால் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.அந்த அடிப்படையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவின்
யாழ்ப்பாண மற்றும் வவுனியா 
அலுவலகங்களில் அவதானிப்புகளின் கீழ் இரண்டு முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டு 
விசாரணைகள் இடம்பெற்றதன் அடிப்படையில் இலங்கை வங்கியின் உரும்பிராய் கிளையிலும் 
முல்லைத்திவு கிளையிலும் மாற்றுவலுவுடையோர் உட்பிரவேசிப்பதற்கான வசதிகள் 
ஏற்படுத்திகொடுக்கப்பட்டுள்ளன. 

இருப்பினும் பல நிறுவனங்களில் மாற்றுவலுவுடையோர் 
உட்பிரவேசிப்பதற்கான வசதிகள் காணப்படவில்லை என்பதுடன் அந்நிறுவனத்தலைவர்கள் தாமாக 
முன்வந்து மாற்றுவலுவுடையோர் உட்பிரவேசிப்பதற்கான வசதிகளை மேற்கொள்ளவேண்டும்
எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவின் யாழ்ப்பாண வவுனியா அலுவலகம்கேட்டுக்கொள்கின்றது என்றுள்ளது.

No comments