Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மக்களை தாக்கியது நாட்டுக்கு எதிரான செயல்


காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்  1983 ஜூலை கலவர நாட்களை மீளவும் நினைவுபடுத்துகிறது. அந்த வடுக்களை இன்னமும் சுமக்கும் இனத்தின் பிரதிநிதியாக எனது கவலையை நான் பதிவுசெய்கிறேன் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை முன்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது , வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தி , அவர்களின் கூடாரங்களை அடித்து நொறுக்கி அவற்றுக்கு தீ வைத்துள்ளது. 

இந்த சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, 

ஜனநாயக மரபுகளின்படி அமைதிவழியில் போராடிய மக்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டமையை கண்டிக்கிறேன்.

பொதுமக்கள் தமது கோரிக்கைகளை அமைதிவழியில் வெளிப்படுத்திய நிலையில்‌, அவர்கள் மீது இன்று கொழும்பில் இடம்பெற்ற வன்முறைத் தாக்குதலானது மிகவும் அநாகரிகமானது.

ஜனநாயக பண்புகளுக்கமைய அமைதியாக போராடும் உரிமை நாட்டு மக்களுக்குண்டு. இன்று அந்த உரிமை மீது இரத்தக்கறை படிந்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவங்களானது நாட்டின் மக்கள் உரிமைகள், அரசியல் உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக மாண்பின் மீது நிகழ்த்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலாக நான் கருதுவதோடு எனது கண்டனத்தை வேதனையடைந்த மனதுடன் தெரிவிக்கிறேன்.

இந்த வன்முறை சம்பவங்களானது, 1983 ஜூலை கலவர நாட்களை மீளவும் நினைவுபடுத்துகிறது. அந்த வடுக்களை இன்னமும் சுமக்கும் இனத்தின் பிரதிநிதியாக எனது கவலையை நான் பதிவு செய்கிறேன் என்றுள்ளது. 

No comments