Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பொருளதார நெருக்கடிக்கு தீர்வு காண ஒத்துழைப்போம்


பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளுக்கு கட்சி சாராத அரசாங்கம், சிறந்த பொறிமுறையாக அமையும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கட்சி சாராத அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு கேட்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனுப்பிய கடிதத்திற்கான பதில் கடிதத்திலேயே ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகத்தினால் மேற்படி கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட மாகாணசபை முறையினை முழுமையாக அமுல்ப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக அதனைப் பயன்படுத்த வேண்டும்.

கட்சி சாராத அரசாங்கத்தினை அமைக்கும் பிரதமர் விக்கிரமசிங்கவின் முயற்சிகளுக்கு ஈ.பி.டி.பி. கட்சி பூரணமான ஒத்துழைப்பினை வழங்கும். 

அதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அழைப்பினையேற்று, சவால்மிக்க தருணத்தில் பிரதமர் பதவியை பொறுப்யேற்றுக் கொண்டமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

 பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீளும் நோக்கில் பல்வேறு நாடுகளுடனும் சர்வதேச நிதி நிறுவனங்களுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தொடர்பாடல்களுக்கும் தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments