அமெரிக்க வைத்தியசாலையில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துல்சா நகரில் உள்ள புனித பிரான்சிஸ் மருத்துவமனை வளாகத்தில் நடாலி மருத்துவ கட்டடத்தில் புதன்கிழமை புகுந்த மர்ம நபர் ஒருவர், துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் நடத்திய எதிர் தாக்குதலில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தாக்குதல் நடத்தப்பட்ட கட்டடத்திற்குள் இருக்கும் நோயாளிகள் உள்பட அனைவரையும் வெளியேற்றும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். வளாகத்தின் வேறு பகுதியில் யாரேனும் கொல்லப்பட்டிருந்தால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
கடந்த வாரம் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ராப் தொடக்கப் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 22 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஒரே வாரத்தில் மற்றொரு துப்பாக்கிச் சூடு நடந்திருப்பது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments