Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நாளை ஜனாதிபதி தெரிவு எவ்வாறு நடைபெறும்?



 ➡️ வாக்களிப்பு நிறைவடைந்ததும் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் அளிக்கப்பட்ட விருப்பு வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணப்படும் இடத்துக்கு யாராவது வேட்பாளர் செல்வதற்கு விரும்பினால் இதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும். இல்லாவிட்டால் அவருடைய பிரதிநிதியாக பிறிதொரு உறுப்பினரை இதற்காக நியமிப்பதற்கான சந்தர்ப்பமும் வேட்பாளருக்கு உள்ளது.

➡️ அளிக்கப்பட்ட வாக்குகளில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கையில் அரைவாசிக்கு மேலான வாக்குகள் யாராவது ஒரு வேட்பாளருக்குக் கிடைக்குமாயின் குறித்த வேட்பாளர் ஜனாதிபதிப் பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பதை தெரிவத்தாட்சி அலுவலர் அதாவது பாராளுமன்ற செயலாளர் நாயகம் உடனடியாக அறிவிப்பார்.

➡️ அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் அரைவாசிக்கு மேலான வாக்குகள் எந்தவொரு வேட்பாளருக்கும் வழங்கப்படாத சந்தர்ப்பத்தில் இந்த நடைமுறை சற்று நீளமானதாக இருக்கும். அதன்போது குறைவான வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் போட்டியிலிருந்து நீக்கப்படுவார். அவ்வாறு நீக்கப்படும் உறுப்பினருக்கு முதலாவது விருப்பைத் தெரிவித்த உறுப்பினர்களின் இரண்டாவது விருப்பத் தெரிவு உரிய வேட்பாளர்களின் வாக்குகளுடன் இணைக்கப்படும். 

➡️ அவ்வாறு செய்தும் எந்தவொரு வேட்பாளருக்கும் செல்லுபடியான வாக்குகளில் அரைவாசிக்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கவில்லையாயின் ஒவ்வொரு கணக்கெடுப்பின் போதும் குறைந்த விருப்பு வாக்குகளைப் பெற்ற உறுப்பினர்கள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட விருப்பு வாக்குகள் இரண்டாவது, மூன்றாவது விருப்பு வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்களுடன் சேர்க்கப்படும். 

➡️ இவ்வாறு செய்தும் எந்தவொரு வேட்பாளரும் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் அரைவாசிக்கும் அதிகமான எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவில்லையாயின் மேலே குறிப்பிடப்பட்டது போன்று வாக்கு எண்ணும்போது அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் ஜனாதிபதி பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்டார் என்பது தெரிவத்தாட்சி அலுவலரினால் சபைக்கு அறிவிக்கப்படும்.

➡️ மேலும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு இடையே வாக்குகள் சமமாக இருந்தால்,  தெரிவத்தாட்சி அலுவலரின் தற்றுணிபின் பேரில் திருவுளச்சீட்டு போடப்படும்.

➡️ அத்துடன், ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று நாட்களுக்குள் வேட்பாளரின் பெயரை செயலாளர் நாயகம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட வேண்டும்.

No comments