Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

புதுக்குடியிருப்பு பொலிஸாரின் காழ்ப்புணர்ச்சியாலையே என் மீதான வீண்பழி - பிரதேச செயலர் ஆதங்கம்

 


புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தன் மீதுள்ள காழ்ப்புணர்சி காரணமாகவே அபாண்டமான குற்றசாட்டை தன் மீது சுமத்தியுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் எஸ்.ஜெயகாந்த் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் மற்றும் செயலரின் தனிப்பட்ட தங்குமிடத்தில் இருந்து பொலிசார் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு 65 லீட்டர் எரிபொருளை மீட்டு இருந்தனர்.

அது தொடர்பில் பிரதேச செயலர் தெரிவிக்கையில்,

அலுவலக மின்பிறப்பாக்கி மற்றும் வாகன தேவைக்காக சுமார் 50 லீட்டரை சேமித்து வைத்திருந்தோம்.

அதேவேளை என்னுடைய சொந்த தேவைக்காக 8 லீட்டர் பெட்ரோலை கடந்த இரு வாரங்களில் பெற்று சேமித்து வைத்திருந்தேன். எனது வீடு யாழ்ப்பாணத்தல் உள்ளமையால், வீடு சென்று வர மோட்டார் சைக்கிள் தேவைக்கு என அதனை சேமித்து வைத்திருந்தேன்.

அத்துடன் கடந்த காலங்களில் எரிவாயு தட்டுப்பாடு நிலவிய வேளையில் சமையலுக்காக வாங்கி வைத்திருந்த சுமார் 3 லீட்டர் மண்ணென்ணெய் என்பவற்றையே பொலிஸார் மீட்டனர்.

அலுவலக தேவைக்காகவும், சொந்த தேவைக்காகவும் வைத்திருந்த எரிபொருளை மீட்டு விட்டு, ஏதோ தாம் பாரிய பதுக்கலை கண்டுபிடித்த மாதிரி செய்திகளை பரப்பியுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கடந்த வெள்ளிக்கிழமை நடைமுறைகளை மீறி இரண்டு எரிவாயுக்களை பெற முனைந்துள்ளார். அதற்கு எமது உத்தியோகஸ்தர்கள் மறுப்பு தெரிவித்து எனது சம்மதத்தை பெற்று வருமாறு கூறி இருந்தனர்.

அதேபோன்று மறுநாள் விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் நடைமுறைகளை மீறி தென்னிலங்கை வாசிக்கு டீசல் பெற்றுக்கொடுக்க முயன்றுள்ளார்.  அதற்கு எமது கிராம சேவையாளர் இடமளிக்கவில்லை. 

அதேவேளை பொலிஸார் வேறு நபர்களின் மோட்டார் சைக்கிள்களை பெற்று வந்து எரிபொருள் பெற்று செல்வதனை தடுத்து இருந்தோம். அத்துடன் நடைமுறைகளை குழப்பி சட்டவிரோதமாக எரிபொருளை பெற முனைத்தவர்களையும் தடுத்துள்ளோம். 

இவ்வாறான நிலையிலையே எம் மீது வீண் பழி சுமத்தும் நோக்குடன் நேற்றைய தினம் எமது அலுவலக தேவை மற்றும் எனது தனிப்பட்ட தேவைக்காக சேமித்து வைத்திருந்த எரிபொருளை மீட்டு அபாண்டமான குற்றச்சாட்டை என் மீது சுமத்தியுள்ளனர். 

இது தொடர்பில் எனது மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உள்ளேன்.  என்றார் 

No comments