Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில்.எரிபொருள் வரிசையில் மோதல் - ஒருவர் படுகாயம்!


யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக காத்திருந்தவர்களுக்கு இடையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைக்கலப்பாக மாறியதில் கும்பல் ஒன்றினால் ஒருவர் மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளார். 

தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த  நபரை அங்கிருந்த ஏனையவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தனர். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


No comments