இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களில் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1050 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 5,800 ரூபாவாகும்.
மேலும், 5 கிலோ எடை கொண்ட லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 2,320 ரூபாவாகும்.
இதேவேளை, 2 கிலோகிராம் லாஃப் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 928 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
No comments