Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

குருந்தூர் மலை கட்டுமானத்தை நிறுத்தி , கோணேஸ்வரர் ஆலய கட்டுமானத்திற்கான தடையை நீக்க கோரிக்கை!


திருக்கோணேஸ்வரர் ஆலயநிர்மாண பணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கின்ற விடயம் தொடர்பில் உடனடியாக தொல்பொருள் அமைச்சின்  கவனத்திற்கு  கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் மனவிதானய தம்மிடம் உறுதி அளித்துள்ளதாக தெல்லிப்பளை துர்க்கை அம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்

பேராசிரியர் புஷ்பரட்ணம் அவர்களின் ஏற்பாட்டில் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் மனவிதானவிக்கும் நல்லைஆதீன முதல்வர் மற்றும் தெல்லிப்பளை  துர்கா தேவி தேவஸ்தான தலைவர் ஆகியோருக்கும் இடையில் இன்றைய தினம் விசேட சந்திப்போன்று நல்லை ஆதீனத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்த கலாநிதி ஆறு திருமுருகன் முக்கியமாக கீரிமலையில் ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில்உள்ள  உயர் பாதுகாப்பு வலயத்தில்  மூன்று கோவில்கள் நீண்டகாலமாக பூஜை வழிபாடுகள் இடம்பெறாது உள்ளன.

 எனவே அந்த மூன்று கோயில்களிலும் உடனடியாக பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு கடற்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் கலந்துரையாடி அதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருக்கின்றோம் 

அதேபோல் கீரிமலையில்  சமாதிகள் சிலவும்  கடற்படையினரின்  கட்டுப்பாட்டில் உள்ளன அவற்றையும் பெற்றுத் தருவதற்கு உதவ வேண்டும் எனக்கு கோரிக்கை விடுத்ததோடு திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோணேஸ்வரர் ஆலய கட்டுமான பணிகளுக்கு தொல்பொருத்திணை கழுத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தெரிவித்த போது தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் இந்த விடயத்தினை  உடனடியாக அமைச்சு மட்டத்திற்கு தெரியப்படுத்தி  தீர்வினை தான் பெற்றுத் தர முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். 

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலை நீண்ட காலமாக  சைவ மக்களால் வணங்கப்பட்டு வந்த அந்த மலையில் வேறு சில கட்டுமான பணிகள் இடம்பெறுகின்றன 

எனவே அந்த விடயங்களை நிறுத்தி உரிய தீர்வினை பெற்று தர வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தோம் என தெரிவித்தார்.

No comments