Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நாடு திரும்பினார் கோட்டாபய ராஜபக்ஷ!


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளார்.

கடந்த ஜுலை மாதம் 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட நிலையில் முன்னாள் ஜனாதிபதி ஜுலை மாதம் 13ஆம் திகதியன்று மாலைதீவுக்கு சென்று இருந்தார். 

ஜுலை 14 ஆம் திகதி மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற முன்னாள் ஜனாதிபதி, ஆகஸ்ட் 11 ஆம் திகதி தாய்லாந்து சென்றடைந்தார்.

மூன்று வாரங்களாக அங்கு தங்கியிருந்த கோட்டாபயவின் பாதுகாப்பை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ததை அடுத்து அவர் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

No comments